நாளை ரேஷன் கடைகள் இயங்காது: ஏன்?

தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பரிசு பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டன. இதனால் அந்த மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தாமதமானது. அதனால், அந்த மாதத்துக்கான பொருட்களை அந்த மாதம் முடிவதற்குள் கொடுக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 30) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கியது.
இந்த மாதிரி விடுமுறை நாளில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைபார்க்கும்போது, அதற்கு மாற்றாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி பணிபுரிந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு மார்ச் 19ஆம் தேதி மாற்று விடுமுறை வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதனால் நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது .
-வினிதா