மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

பயிர்கள் கருகும் அவலம்: அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

பயிர்கள் கருகும் அவலம்: அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

கடும் வறட்சி காரணமாக நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் விவசாய பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாய பயிர்கள் கருகும் அவல நிலையில் உள்ளது. இதேபோல் வனப்பகுதியிலும் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இதன் காரணமாக காமராஜ் சாகர் மற்றும் பைக்காரா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வனத்துறை சார்பில் குந்தா மின் கோட்ட பொறியாளருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இதேபோல் விவசாய பயிர்களை தொடர்ந்து பராமரிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், "கோடைக்காலத்தை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய், அவரைக்காய் மற்றும் கத்திரிக்காய் உட்பட பல வகை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் கோடை மழை பெய்வது வழக்கம்.

ஆனால், நடப்பாண்டில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாவனல்லா, செம்மநத்தம் பகுதியில் விவசாய பயிர்கள் கருகி வருகிறது. இதன் காரணமாக நஷ்டம் ஏற்படும் சூழல் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் அணை தண்ணீரை எதிர்பார்த்து விவசாயப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலை நீடித்தால் அனைத்து பயிர்களும் கருகிவிடும். அதுபோன்று கால்நடைகளுக்குக்கூட தண்ணீர் கொடுக்க முடியாமல் போய்விடும். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காமராஜர் மற்றும் பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 17 மா 2022