மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

நாளை மறுநாள் முதல் 12-14 வயதினருக்கு தடுப்பூசி!

நாளை மறுநாள் முதல் 12-14 வயதினருக்கு தடுப்பூசி!

நாளை மறுநாள் முதல் 12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் உலக மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது நாட்டில் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து தினசரி பாதிப்பு 2500 என்ற அளவில் குறைந்திருந்தாலும், கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி நாட்டில் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் முன்களபணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கார்பேவாக்ஸ் எனும் தடுப்பூசியை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி எப்போது தொடங்கும் என்ற தகவலை அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். வரும் மார்ச் 16ஆம் தேதி முதல், 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி(கார்பேவாக்ஸ்) போடும் பணி தொடங்குகிறது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் (Biological Evans) என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறார்கள்.

அதுபோன்று, இதுவரை முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தி வந்தநிலையில், இனி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 14 மா 2022