மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

இறந்துபோன தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்கா!

இறந்துபோன தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்கா!

சமீப காலமாக பெரும்பாலான திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப காரியங்களில் இறந்துபோன முக்கியமான குடும்ப உறுப்பினரின் மெழுகு சிலையை வைத்து நடைபெறும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. நிகழ்ச்சியில் இறந்தவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் இந்த சம்பவம் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் உயிரிழந்த சகோதரனின் மெழுகு சிலையை வடிவமைத்து, அதன் மடியில் தனது குழந்தைகளை அமர வைத்து சகோதரி காதணி விழா நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த தம்பதி சவுந்தரபாண்டி-பசுங்கிளி. இவர்களின் மகன் பாண்டித்துரை(21) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரின் மூத்த உடன்பிறப்பான பிரியதர்ஷி என்பவருக்கு தாரிகாஸ்ரீ என்ற மகளும், மோனேஷ்குமரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் பாண்டித்துரை பாசமாக இருப்பார். இவர்களுக்கு தனது மடியில்வைத்துதான் காது குத்த வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரியதர்ஷினி தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். தனது இறந்துபோன தம்பியின் கனவையும் நிறைவேற்ற எண்ணிய பிரியதர்ஷினி, பெங்களூருவில் உள்ள கலைஞர்கள் மூலம் ரூ.5 லட்சம் செலவில் பாண்டித்துரையின் மெழுகு சிலையை உருவாக்கினார்.

காதணி விழாவில் தத்ரூபமாக பாண்டித்துரை வேட்டி, சட்டை, துண்டு அணிந்து, புன்னகையுடன் சேரில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட சிலையை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர். இந்த சிலையை நேற்று முன் தினம் இரவு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் தாய்மாமன் மெழுகு சிலையை ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கு அனைவர் முன்பும் தாய்மாமன் பாண்டித்துரை மெழுகு சிலை மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 14 மா 2022