மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

தரமற்ற உணவகத்தில் நிறுத்தம்: ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

தரமற்ற உணவகத்தில் நிறுத்தம்: ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

அனுமதி பெறாத, தரமற்ற உணவகத்தில் அரசு பேருந்தை நிறுத்தியதற்காக கடலூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநரும், நடத்துநரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் நீண்ட தூர பேருந்துகள், உணவு இடைவெளிக்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், அதனால் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவகங்களின் பட்டியலை போக்குவரத்து துறைக்கு சமர்ப்பித்தது. இதனடிப்படையில், தரமற்ற உணவகங்களில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டதுடன், எந்தெந்த உணவகங்களில் உணவு இடைவெளிக்காக நிற்க வேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டது.

இந்த நிலையில், கடலூர் விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து கடந்த 10ஆம் தேதி விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு வந்தது. அப்போது, விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் பேருந்து நின்றது. அங்கு உணவருந்திய பயணிகள், அனுமதி பெறாத மற்றும் தரமற்ற உணவகத்தில் அரசு பேருந்து நின்றதாக பணிமனை மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், தரமற்ற உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது உண்மை என தெரிய வந்தது. தொடர்ந்து அன்றைக்கு பணியில் இருந்த பேருந்தின் ஓட்டுநர் விஜயகுமார், நடத்துநர் சேட்டு இருவரையும் சஸ்பெண்ட் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் மாரிமுத்து உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 14 மா 2022