மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

வனவிலங்குகளின் தாகம் தணிக்க... வனத்துறை கடிதம்!

வனவிலங்குகளின் தாகம் தணிக்க... வனத்துறை கடிதம்!

வனவிலங்குகளின் தாகம் தணிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு வனத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டலத்தில் கார்குடி, முதுமலை, தெப்பக்காடு சரக பகுதியும், வெளிமண்டலத்தில் மசினகுடி, சிங்காரா, சீகூர், நீலகிரி மேற்கு பள்ளத்தாக்கு சரக பகுதிகளும் உள்ளன.

தற்போது கோடைக்காலம் என்பதால் வெளிமண்டல பகுதியான சிங்காரா, சீகூர் சரகத்தில் கோடை வறட்சியின் தாக்கம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

அத்துடன் காட்டு யானை, மான், காட்டெருமைகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வனவிலங்குகள் தாகம் தணிக்க தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊட்டி, கோத்தகிரி பகுதியில் மட்டும் மழை பெய்தது. வனப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக சிங்காரா, சீகூர் வனச்சரக பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகிறது.

எனவே இந்த வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் பைக்காரா, காமராஜ் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குந்தா மின்வாரிய நிர்வாகப் பொறியாளருக்கு முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வன அதிகாரிகள், "புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி, முதுமலை தெப்பக்காடு சரக பகுதிகளில் வறட்சியின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. ஆனால், மசினகுடி, சிங்காரா, சிகூர் சரக பகுதியில் வறட்சி மிக அதிகமாக நிலவுகிறது.

இதனால் பைக்காரா, காமராஜ் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால் இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரும் இதன் காரணமாக இங்குள்ள வனவிலங்குகள் தாகம் தணிக்க ஏதுவாக இருக்கும்.

எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஏற்கெனவே பேசியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “முதுமலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வறட்சியால் இடம்பெயர்ந்து சுற்றித்திரிந்து வருகிறது. வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் மின்வாரியம் காமராஜ் சாகர் அணையை உடனே திறந்துவிட வேண்டும். இந்த தண்ணீர் கால்வாய் வழியாக கல்லட்டி நீர்வீழ்ச்சி, வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், சீகூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. அடர்ந்த வனப்பகுதி நடுவே செல்வதால் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள், இந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்க்க உதவும்” என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

சனி 12 மா 2022