மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 மா 2022

சிறந்த விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு!

சிறந்த விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு!

புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகையில், "2021-22ஆம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில் நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசும், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயி, முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்புகொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பப் படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்டத் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே 60,000, 40,000 ரூபாயும் வழங்கப்படும். அதேபோன்று, வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படவுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 18ஆம் தேதி கடைசி என்பதால், அதற்குள்ளாக விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 11 மா 2022