மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 மா 2022

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் நாளை (மார்ச் 12) தனியார் துறை சார்பில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஜி.கே. உலகப் பள்ளியில் வருகிற நாளை (மார்ச் 12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் சென்று ஏற்பாடுகளை விளக்கி கூறினார். ஆய்வுக்குப் பின்னர் பேசிய அமைச்சர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் எனப் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜி.கே.உலகப் பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுபவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பொறியியல், கலை, அறிவியல் பட்டபடிப்பு மற்றும் பட்டயப் படிப்பு வரை படித்துள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு முகாமுக்கு வரும் அனைவருக்கும் தேவையான தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தாய்மார்கள் யாரேனும் வந்தால் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்தத் தொழில் பயிற்சி நிலையங்களை மேம்படுத்திட தலா ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.2,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு தொழிற்பயிற்சி நிலங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எந்திரங்கள் புதிய தொழில் பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவ மாணவிகளின் தொழிற்கல்வி குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 11 மா 2022