மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச் 11) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5,497 மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு கேட்டு பதிவு செய்துள்ளனர். இந்த மனுதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி மனுதாரர்களை தேர்வு செய்யும் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள், இம்முகாமில் கலந்துகொள்ள உள்ளன.

எனவே 18 வயது முதலான மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. தனியார் துறையில் பணி வாய்ப்பை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 10 மா 2022