மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

சூடுபிடிக்கும் குடமிளகாய்!

சூடுபிடிக்கும் குடமிளகாய்!

தமிழகம் முழுக்க குடமிளகாய் சீசன் தற்போது தொடங்கியுள்ளதால் விற்பனைக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குடமிளகாய் பெரியது, சிறியது என இரண்டு வகை உள்ளன. இதில் பெரிய வகை குடமிளகாய் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும். குறைந்த கார சுவையும், ஒருவகை மணமும் கொண்ட குடமிளகாய் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்ய பயன்படுகிறது. சிறிய வகை குடமிளகாய் தஞ்சை பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் இதை தஞ்சை மிளகாய் என்றும் கூறுவது உண்டு. இந்த குடமிளகாயைப் புளித்த தயிரில் உப்பிட்டு ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வத்தலாக்கி எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

தற்போது கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் அதிகம் விளையும் இந்த சிறிய வகையான குடமிளகாய் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் விற்பனைக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது.

தஞ்சை மாவட்டமல்லாது, வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் குடமிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோடை காலத்துக்கேற்ற குடமிளகாய், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானூர்பட்டி, செல்லம்பட்டி, வெட்டிக்காடு, வல்லம், மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்கழி மாத பட்டத்தில் நடவு செய்து, தற்போது செடிகள் வளர்ந்து, குடமிளகாய் காய்த்துள்ளது. இதுபோல் ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் குடமிளகாய் சீசன் தொடங்கும். தற்போது சீசன் தொடங்கிய நிலையில் தஞ்சையில் விளைந்த குடமிளகாய் தஞ்சை மாவட்டம் முழுவதுமுள்ள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீசன் நேரத்தில் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சீசன் தொடங்கிய நிலையில் அதிக வரத்து இருப்பதால் தற்போது கிலோ குடமிளகாய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள குடமிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், ‘குடமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். இதை வற்றலுக்கு பயன்படுத்துவார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலையும் குறைவாக உள்ளது. கோடைக்காலம் என்பதால் வெயிலில் காய வைப்பதும் எளிது. அதனால் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்’ என்றனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 10 மா 2022