மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

நிலத்தடி நீர் மாசு: மாணவர்களுடன் பொதுமக்கள் போராட்டம்!

நிலத்தடி நீர் மாசு:  மாணவர்களுடன் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது, அவினாசி தாலுகா புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, தத்தனூர் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, ஆட்சியரிடம் தங்கள் மனுவைக் கொடுத்தனர். அந்த மனுவில், "தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய மூன்று ஊராட்சி பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகிறோம். ஏற்கனவே பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டையால் அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டதால் மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தத்தனூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு நிலத்தைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் மாசுபடும். எங்கள் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டாம் என்று பலமுறை அரசிடம் தெரிவித்துள்ளோம். தத்தனூர் சிப்காட்டை ரத்து செய்வதாக அரசு அறிவித்ததால் போராட்டத்தை நாங்கள் கைவிட்டோம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டு எங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வர உள்ளது. விவசாயம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் சிப்காட் தொடர்பாக வரைபடம் தயாரிப்பதற்கு மறு ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தனர். சுமார் 1,500 ஏக்கர் கொண்ட பரப்பளவு நிலத்தை ஆய்வு செய்கிறார்கள். அந்த நிலத்துக்குள் அத்திக்கடவுஅவினாசி திட்டத்தின் ஐந்தாவது நீரேற்றும் நிலையம் உள்ளது.

இதனால் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்ற சந்தேகம் உள்ளது. சிப்காட் குறித்து அவினாசி தாசில்தாரிடம் கேட்டபோது எந்தவித ஆணையும் வரவில்லை என்று கூறினார். எங்கள் பகுதியில் சிப்காட் அமைந்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே எங்கள் பகுதியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்து சிப்காட் அமையாது என்ற அரசாணை வெளியிட்டு அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், சாமளாபுரம் கருப்பராயன் கோயில் வீதியில் குடியிருக்கும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகளோடும், பள்ளி மாணவ மாணவிகளோடும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மாணவ மாணவிகள் கொடுத்த அந்த மனுவில், "நீர்நிலை புறம்போக்கில் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடிப்பதாக பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வீடுகளை இடித்து விட்டால் நாங்கள் எங்கு தங்குவது, பள்ளியில் தேர்வு எழுதுவது என கவலையாக உள்ளது. அதனால் எங்கள் வீடுகளை இடிக்க வேண்டாம்" என்று கூறியுள்ளனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 9 மா 2022