கிச்சன் கீர்த்தனா: ஏபிசி (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) ஜூஸ்!

இன்றைய இளைஞர்களுக்கு விருப்ப ஜூஸாக இருக்கும் இந்தப் பானத்தில் உயிரைக் காக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதுடன், வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே, பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீஷியம் போன்ற சத்துகள் அபரிமிதமாக உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், பார்வைக் கூர்மைக்கும், எடையைக் குறைப்பதற்கும் இந்தப் பானம் உதவுகிறது. சளியால் வரும் காய்ச்சல் மற்றும் தொண்டைத் தொற்றுக்கும் இந்தப் பானம் நல்லது. தினமுமே, இந்த ஏபிசி பானத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால், ஆரோக்கியத்துக்கும் அருமையான காவலனாக இருக்கும்.
என்ன தேவை?
ஆப்பிள், பீட்ரூட் - தலா 1
கேரட் - 2
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஆப்பிள் மற்றும் காய்களைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஜூஸாகச் செய்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழச் சாறைச் சேர்க்கவும். விருப்பப்பட்டவர்கள், மிளகுத்தூள் சேர்க்கலாம். நன்றாகக் கலந்து அருந்தவும்.
குறிப்பு:
பீட்ரூட்டில் இயற்கைச் சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.