மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

புரிந்துகொள்ள இயலாத நிலையில் தமிழ்வழி பாடப்புத்தகங்கள்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

புரிந்துகொள்ள இயலாத நிலையில் தமிழ்வழி பாடப்புத்தகங்கள்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

11, 12ஆம் வகுப்புகளுக்கு தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடை வாசித்து புரிந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளிக்கல்வித் துறை தலைமைச் செயலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் திருத்தி எழுதப்பட்டன. புத்தகங்கள் தமிழ்வழியிலும், ஆங்கிலவழியிலும் எழுதப்பட்டன. தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடை வாசித்து புரிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது.

இந்தப் புத்தகங்களின் வரிகளை மாணவர்கள் படித்து புரிந்துகொள்ளவோ, மனப்பாடம் செய்யவோ இயலவே இயலாது. இந்தப் புத்தகங்களின் எழுத்து நடை இயல்பானது அல்ல. இக்குறையை சுட்டிக்காட்டி முன்பே கருத்துக்கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலும் எழுத்து நடை மாற்றப்படவில்லை. தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடையை மாற்றி அமைத்தால்தான் தமிழ்வழி மாணவர்களால் படிக்க இயலும். இல்லையேல் சாதாரண பள்ளி தேர்வுகள் எழுதவே மாணவர்கள் மிகுந்த சிரமப்படுவர். போட்டி தேர்வுகள் எழுதவே முடியாது.

ஆகவே 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடையை மாற்றி, சிறு, சிறு வாக்கியங்கள் ஆகவும், படிக்கும்போது எளிமையாக இருக்கும் வகையிலும், சரளமான எழுத்து நடையுடனும் அமைக்க வேண்டும். தமிழ்வழி கல்வியில் பயில்வோர் எதிர்காலத்தில் அறிவியல் தமிழை உற்பத்தி மொழியாகப் பயன்படுத்தும் அளவில் உருவாக்கிட வேண்டும்"

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

செவ்வாய் 8 மா 2022