மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 மா 2022

திருவிழா தகராறு: மக்கள் மீது போலீஸ் தடியடி!

திருவிழா  தகராறு: மக்கள் மீது போலீஸ் தடியடி!

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் தேர் திருவிழாவை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மாவட்ட அளவில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா நாட்களில் ஒருநாள் தேர் இழுக்கும் விழா நடைபெறும். தேவிகாபுரத்தைச் சுற்றியுள்ள 20 கிராம மக்களும் ஒன்று கூடி தேர் இழுப்பது வழக்கம்.

இந்த திருவிழா நாளை தொடங்கி 13 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழாவை பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திருவிழாவை நடத்த அனுமதி வழங்குவதில் அறநிலையத் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி தேவிகாபுரம் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதலே அனைத்து கடைகளையும் அடைத்து, அப்பகுதி மக்கள் கிட்டதட்ட ஐந்து மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்து அறநிலைய அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் பேச வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, போளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டாத நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இதனால் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தடியடியில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 7 மா 2022