மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மா 2022

அதிக விலைக்கு மஞ்சள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

அதிக விலைக்கு மஞ்சள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்ந்து குவிண்டால் ரூ.10,629-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த மஞ்சள் கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 779 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5,619-க்கும், அதிகபட்சமாக ரூ.8,289-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5,389-க்கும், அதிகபட்சமாக ரூ.7,559-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 599 மஞ்சள் மூட்டைகள் ஏலம் போனது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 5,667 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7,399-க்கும், அதிகபட்சமாக ரூ.9,699-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6,699-க்கும், அதிகபட்சமாக ரூ.8,439-க்கும் ஏலம் போனது. 3,610 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது.

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்திற்கு 814 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.7,594-க்கும், அதிகபட்சமாக ரூ.8,699-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6,699-க்கும், அதிகபட்சமாக ரூ.7,739-க்கும் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்ததில் 534 மூட்டை மஞ்சள் ஏலம் போனது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு 241 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.7,399-க்கும், அதிகபட்சமாக ரூ.10,629-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.7,589-க்கும், அதிகபட்சமாக ரூ.7,939-க்கும் ஏலம் போனது. 199 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. மஞ்சள் விலை நேற்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-ராஜ்

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 6 மா 2022