மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மா 2022

விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

கோவையில் லாரி மீது கார் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிசார் அலி. இவர் அண்மையில் செகன்ட் ஹேண்டாக ஆம்னி கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நிசார் அலி மற்றும் அவரது நண்பர் ராமசந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலுள்ள தர்காவிற்குச் சென்றனர். வடகரையில் உள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கோவை வழியாகச் சொந்த ஊர் திரும்பினர்.

அப்போது, அந்த ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து வாளையாறு அடுத்த கே.ஜி சாவடி அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த குழந்தைகள் அஞ்சுதா ஸ்ரீ(5), மித்ரன்(3) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த மோனிஷ், ராமசந்திரன், சரிதா, நந்திதா,அக்ஷயா, காஞ்சனா குமாரி, இந்துமதி ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிசார் அலிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்துடன் வெளியே சென்று வந்த போது ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்திருப்பது அவரது உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-பிரியா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 6 மா 2022