மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

பூண்டு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

பூண்டு விலை வீழ்ச்சி:  விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விளைச்சல் அதிகரிப்பால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கவர்னர் சோலை பகுதியில் விளைநிலத்தில் பயிரிட்ட பூண்டுகளை தொழிலாளர்கள் அறுவடை செய்து தரம் பிரித்து மூட்டைகளில் நிரப்பி வருகின்றனர். இவை விற்பனைக்காக ஊட்டி நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஊட்டியில் பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருவதாலும் ஊட்டி பூண்டின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் பராமரிப்பு செலவு, தொழிலாளர்கள் கூலி போன்றவற்றை எடுக்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.

பூண்டு முதல் தரம் கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை, இரண்டாவது தரம் ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டும் விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 5 மா 2022