மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

நூலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்க புதிய குழு!

நூலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்க புதிய குழு!

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க 10 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் நாட்டு நடப்பு மற்றும் தகவல்களை தெரிந்துகொள்வதற்காக தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம் உள்பட பல்வேறு விதமான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

நூலகங்களுக்கு எந்தெந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதை தேர்வுசெய்ய தனியே தேர்வுக்குழு உள்ளது. இந்த தேர்வு குழுவுக்கு நாளிதழ் நிறுவனங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் மற்றும் புத்தகங்களை வழங்க விரும்புவது தொடர்பாக விண்ணப்பிப்பார்கள். இவ்வாறு பதிப்பகத்தினர் விண்ணப்பித்த புத்தகங்களை தேர்வுக்குழு ஆய்வுசெய்து என்னென்ன புத்தகங்களை வாங்கலாம்? என்ற பட்டியலை அரசிடம் சமர்ப்பிக்கும். பின்னர் அரசு அனுமதி வழங்கியதையடுத்து, நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள், புத்தங்கள் வாங்கப்படும்.

ஆனால், சமீப காலமாக, இந்த தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், நாளிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழக அரசு, நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க 10 பேர் கொண்ட புதிய குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது.

அதன்படி, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா நூற்றாண்டு நூலகர் முனைவர் செ.காமாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் இணைய இதழ் ஆசிரியர் சமஸ், ஜெயராணி, தினேஷ் அகிரா, அ.அருண்குமார், டாக்டர் கணேசன், முனைவர் விஜயபாஸ்கர், அதிஷா வினோ, முனைவர் வீ.அரசு, சுட்டி கணேசன் யுவராஜ், கரு.ஆறுமுகத்தமிழன் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த குழுவினர் பொதுநூலக இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இக்குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 4634 நூலகங்கள் உள்ளன.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 5 மா 2022