11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து வினாத்தாள்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
ஏப்ரல் 5 - மொழித் தாள்
ஏப்ரல் 6- ஆங்கிலம்
ஏப்ரல் 7 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர்வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
ஏப்ரல் 8 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
ஏப்ரல் 11 - கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், வணிகவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஆடை வடிவமைப்பு மற்றும் துணி நூல், உணவு சேவைகள் மேலாண்மை, விவசாய அறிவியல்,நர்சிங்.
ஏப்ரல் 12 - உயிரியல், தாவரவியல், வரலாறு, அடிப்படை கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்.
ஏப்ரல் 13 - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.
இந்தாண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-வினிதா