மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 மா 2022

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்... காரணம் என்ன?

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்... காரணம் என்ன?

இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது என்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

‘நைட் பிராங்க்’ என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவிலான சொத்து விவர அறிக்கையைத் தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாகப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58,828 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 10,569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு 12,287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13,637 ஆக அதிகரித்தது. ஒரே ஆண்டில் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில், பெங்களூருவில்தான் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 17.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அங்கு 352 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். டெல்லி, மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பங்குச்சந்தையின் வளர்ச்சியும், டிஜிட்டல் புரட்சியும்தான் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்று ‘நைட் பிராங்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

இதுதவிர, உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா 748 பெரும் பணக்காரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா 554 பேருடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 145 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 3 மா 2022