மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

புத்தொழில்: ஆதார நிதிக்கு விண்ணப்பிக்கலாம்!

புத்தொழில்: ஆதார நிதிக்கு விண்ணப்பிக்கலாம்!

புத்தொழில் (ஸ்டார்ட்அப் நிறுவனம்) தொடங்க தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் ஆதார நிதி பெற விண்ணப்பிக்க வருகிற மார்ச் 11ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, உலகளாவிய அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க செயலகம் (StartupTN - Tamil Nadu Startup And Innovation Mission) செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை தகுதிவாய்ந்த நடுவர் குழு மூலம் தேர்வு செய்து ஆரம்பகட்ட ஆதார நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஆதார நிதி கடந்த ஆண்டு 2021 டிசம்பர் 23ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதார நிதி வழங்கப்பட உள்ளது. “இந்த நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் தம்மை நிலைப்படுத்தி கொள்ளவும், வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்” என்று புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் கூறியுள்ளார்.

மேலும், “இந்த மானியத் தொகையைப் பெற விரும்பும் நிறுவனங்கள் www/startuptn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளைப் பற்றியும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். வருகிற 11ஆம் தேதி இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்” என்றும் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 1 மா 2022