மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்!

ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு மாற்றியுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் இயங்கும்.

சென்னை தவிர இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் குறித்து பணியாளர்களுக்கு தெரிவிப்பதோடு, குறித்த நேரத்தில் கடைகளை திறந்து செயல்படுத்துவதற்கு அறிவுறுத்துமாறு மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அறியும் வகையில், வேலை நேரம் குறித்த விவரம் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

குறித்த நேரத்தில் ரேஷன் கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 1 மா 2022