மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 பிப் 2022

கூடுதல் கட்டணம்: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

கூடுதல் கட்டணம்: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட  வியாபாரிகள்!

வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை வாரச்சந்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் மூட்டைக்கு ரூ.10 வசூல் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 27) காய்கறிகளைக் கொண்டுவந்த வியாபாரிகளிடம் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

-ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

திங்கள் 28 பிப் 2022