மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 பிப் 2022

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை!

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை!

கடந்த மூன்று நாட்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக ஒரே நாளில் கடுமையாக உயர்ந்த தங்கத்தின் விலை மறுநாள் அதே அளவில் இறங்கியது. கடந்த 24ஆம் தேதி உக்ரைன்- ரஷ்ய போர் தொடங்கியது. அன்று ஒரேநாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 608 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரேநாளில் இந்தளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததால், இல்லதரசிகள் கவலை அடைந்தனர். ஆனால் மறுநாள் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.38,472க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமையன்று ரூ.37 ஆயிரத்து 904க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், முந்தைய நாளின் விலைப்படி விற்பனை நடந்தது.

தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 28) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.38,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.75 அதிகரித்து ரூ.4,813க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று கிராம் வெள்ளி ரூ.69லிருந்து ரூ.70.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.600 அதிகரித்திருப்பது இல்லதரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகளுக்கும் கூடுதலாக சரிவடைந்து 55 ஆயிரம் புள்ளிகளாக வணிகமாகிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வெகுவாக சரிந்து 16,400க்கு வணிகமாகிறது.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 28 பிப் 2022