மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 பிப் 2022

தொடரும் கைது: கவலையில் ராமேஸ்வர மீனவர்கள்!

தொடரும் கைது: கவலையில் ராமேஸ்வர மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்

அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகையும், 8பேரையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர் இலங்கை கடற்படையினர்.

இதனால் பாதிக்கப்பட்ட மற்ற மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மீனவர்களின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.

சிங்கள கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

-பிரியா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 27 பிப் 2022