மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தூக்கத்துக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தூக்கத்துக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டா?

உணவுப்பழக்கத்துக்கும் தூக்கத்துக்குமான நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.

“நம் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு மனிதனுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 8 மணி நேர உறக்கம் என்பது மிக முக்கியம். சிலர் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை தூங்கு வார்கள். இது முறையான தூக்கம் ஆகாது.

அன்றைய நாள் காலை முதல் இரவு வரை நாம் உட்கொண்ட உணவு சரியான முறையில் செரிமானம் ஆவதற்கும் ஊட்டச்சத்துகளைக் கிரகித்து அடுத்த நாள் காலையில் மீண்டும் உடல் ஆற்றலைத் தூண்டுவதற்கும் முதல் நாள் தூக்கம் அத்தியாவசியமான ஒன்று.

இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் தூங்குவதற்கு முன்பாகவே பாதி உணவு செரிமானம் ஆகிவிடும். இதனால் வயிற்றுப் பகுதி பாரம் குறைந்து இருப்பதால் நிம்மதியான தூக்கம் வரும்.

இரவு நேரங்களில் நூடுல்ஸ், ராஜ்மா, சன்னா போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை செரிமானத்தைப் பாதித்து, தூக்கத்தையும் கெடுக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கலந்த உணவுகளை இரவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.

இட்லி - சாம்பார், தோசை - சட்னி போன்றவை சிறந்த உணவுகள். சிலர் டயட் என்ற பெயரில் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். இதனாலும் இரவு தூக்கம் பாதிக்கப்படும்.

சாப்பிட்டவுடன் கடினமான உடற்பயிற்சியோ, நீண்ட நேர நடைப்பயிற்சியோ செய்யக் கூடாது. 10 நிமிடங்கள் மிதமான வாக்கிங் செய்யலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் உணவு நன்கு செரித்து நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்” என்கிறார்கள்.

“நம் உடலில் வாதம் (காற்று) அதிகமாக அல்லது சீரற்று இருக்கும் நிலையே தூக்கமின்மைக்கான காரணம் என்கிறது சித்த மருத்துவம். நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்துக்கு அவசியம். இங்கு சமநிலை என்பது நபருக்கு நபர் மாறுபடும். வாதம் அதிகமாகும்போது ஏற்படும் சிரமங்களுள் தூக்கமின்மையும் ஒன்று.

சித்த மருத்துவரின் ஆலோசனையோடு அவரவருக்கு ஏற்ற எண்ணெயைத் தேர்வுசெய்து வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுத்தால் வாதம் குறைந்து தூக்கமின்மை சரியாகும். அமுக்கிரா சூரணத்தைப் பாலில் கலந்து பருகுவது தூக்கத்தை வரவழைக்கும். கசகசாவை தண்ணீரில் ஊறவைத்து அரைத்துப் பால் எடுக்கவும். ஒரு டீஸ்பூன் அளவு இருந்தால்கூட போதுமானது. அதைக் குடித்துவிட்டுப் படுத்தாலும் நல்ல உறக்கம் வரும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

நேற்றைய ரெசிப்பி: மைசூர் சில்லி சிக்கன்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 27 பிப் 2022