மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இரண்டுமாத கால அவகாசம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இரண்டுமாத கால அவகாசம்!

தேர்வர்கள், ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறையில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒவ்வொரு தேர்வையும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு மே 21ஆம் தேதி குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை வரும் 28 ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும். அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கடந்த 1ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான அறிக்கை 23 அன்று தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடைசி நாள் பிப்ரவரி 28 ஆகும். ஆகையால், 28க்குள் ஆதார் எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் இணைக்காதவர்கள், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.

அதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை ஒருமுறை இணைத்தால் போதுமானது என்பதால், ஏற்கனவே தங்களது ஆதார் எண்ணை இணைத்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணைக்கத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 26 பிப் 2022