மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 பிப் 2022

பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா?

பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா?

பணி நிரந்தரம் செய்யக் கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளை கற்பிக்க 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஆட்சியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது இவர்களை நேரில் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். தேர்தல் அறிக்கையிலும் திமுக இதை குறிப்பிட்டிருந்தது.

தற்போது திமுக ஆட்சி அமைந்து ஒன்பது மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கவன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் செய்யக் கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக பகுதிநேர, சிறப்பாசிரியர்கள் கவன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேசுராஜா, “2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சி அமைந்தவுடன் தங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். ஆனால், தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாதம் வெறும் 10,000 மட்டுமே ஊதியம் பெற்று வரும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதை நிறைவேற்றும்வரை எங்களின் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த பகுதி நேர ஆசிரியை ஜெயப்பிரியா கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்களை ஆளும் கட்சி அறிந்ததே. அதனடிப்படையில்தான் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். அதை கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கவன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விடியல் அரசு எங்களுக்கு விரைவில் விடியலை கொண்டு வரும் என்று நம்புகிறோம்.

பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் சமுதாயத்திலும், பள்ளியிலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். மாணவர்கள் கூட எங்களை அரை நேர ஆசிரியர்களாக மட்டுமே மதிக்கின்றனர். இந்த பத்தாண்டுக் கால வாழ்க்கையில் அரைவாழ்வுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால், இந்த அரசு விரைவில் எங்களுக்கு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

-வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 25 பிப் 2022