மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 பிப் 2022

நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு: டேங்கர் லாரி வழிமறிப்பு!

நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு:  டேங்கர் லாரி வழிமறிப்பு!

சீர்காழி அருகே, நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் முதல் கருவி வரை புறவழிச் சாலையில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு சாலை விரிவாக்க பணி ஒரு தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் சாலை அமைப்பதற்கான பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து டேங்கர் லாரி மூலம் கொண்டு சென்று பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நிலத்தடி நீரை எடுத்து சாலை விரிவாக்க பணிக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பாதரக்குடி புறவழிச்சாலை அருகே சாலை பணிக்காக தண்ணீர் எடுத்து வந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு குடிநீர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே இந்த பகுதியில் தண்ணீர் எடுக்கக் கூடாது. மேலும் சாலை அமைப்பதற்காக பட்டா நிலத்தில் உள்ள பனை மரங்களை உரியவர்கள் அனுமதியின்றி வெட்டக் கூடாது. சாலை அமைப்பதற்காக சாலையோரம் உள்ள பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளது. இதைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாசில்தாரிடம் சாலை அமைக்கும் தனியார் கம்பெனி நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது. மூடப்பட்ட பாசனம் மட்டும் வடிகால் வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், கிராம மக்கள் சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

இதைத் தொடர்ந்து தாசில்தார் சண்முகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக அடுத்த வாரத்தில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பாதரக்குடி பொதுமக்கள் மற்றும் சாலை அமைக்கும் நிறுவனம் சார்பில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.

-ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வெள்ளி 25 பிப் 2022