மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: கோடி வெப்புடு!

கிச்சன் கீர்த்தனா: கோடி வெப்புடு!

கோடி வெப்புடு என்பது ஒரு ருசியான காரமான ஆந்திர சிக்கன் ஃப்ரை. ஆந்திர ரெசிப்பிகள் தனித்துவமான காரம் மற்றும் சுவைக்காக பிரபலமாக இருக்கும். இந்த கோடி வெப்புடு சூடான சாதத்துடன் பரிமாறப்படும் ஸ்பெஷல் டிஷ். காரமான உணவுப் பிரியர்களின் குடும்பத்தினருக்கு இந்த கோடி வெப்புடு சிறப்பு உணவாக அமையும்.

என்ன தேவை?

எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ (துண்டுகளாக நறுக்கவும்)

தட்டிய பூண்டு – 30 கிராம்

நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

காய்ந்த மிளகாய் – 3

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சீரகம் – அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். பிறகு மிளகுத்தூள் தூவிக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: ஆந்திர ஸ்டைல் சிக்கன் பிரியாணி

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 25 பிப் 2022