மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

முட்டை விலை மீண்டும் சரிவு: 405 காசுகளாக நிர்ணயம்!

முட்டை விலை மீண்டும் சரிவு: 405 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவடைந்து, 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக சரிவடைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை சரிவடைந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனால், தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முட்டையின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.114 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வியாழன் 24 பிப் 2022