மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

கொரோனாவுக்குப் பிறகு வேகமெடுக்கும் ரயில் பெட்டிகள் தயாரிப்பு!

கொரோனாவுக்குப் பிறகு வேகமெடுக்கும் ரயில் பெட்டிகள் தயாரிப்பு!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறைக்குத் தேவைப்படும் ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில் பெட்டி தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே அதிகாரிகள், ‘‘கொரோனா பாதிப்புக்குப் பிறகு சென்னை ஐசிஎஃப்பில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஐசிஎஃப்புக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் 3,674 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ரயில் பெட்டிகளையும் விரைவில் தயாரிக்கும் வகையில் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். இவற்றில் எல்எச்பி கொண்ட பெட்டிகள்தாம் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, 15 விஸ்டடோம் சுற்றுலா ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வியாழன் 24 பிப் 2022