மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

ஆமை வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை வேலை!

ஆமை வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை வேலை!

நெய்வேலி அருகே விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி வர்த்தக சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், சாலையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியை அடுத்த இந்திரா நகர் ஊராட்சி மற்றும் வடக்குத்து ஊராட்சியைச் சேர்ந்த வர்த்தகர்கள் சங்கத்தினர் நேற்று காலை என்எல்சி ஆர்ச் கேட் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுத் தொடர்ந்து அவர்கள் கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வடக்குத்து கிராம நிா்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணன், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதையேற்ற வர்த்தக சங்கத்தினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

செவ்வாய் 22 பிப் 2022