மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

அறங்காவலர்களை நியமிக்காதது துரதிருஷ்டவசமானது!

அறங்காவலர்களை நியமிக்காதது துரதிருஷ்டவசமானது!

கோயில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்களை நியமிக்காதது துரதிருஷ்டவசமானது. இருப்பினும், கோயில்களின் நலனுக்காக அறநிலையத் துறை ஊழியர்கள், கோயில் ஊழியர்களாகத் தற்காலிகமாக அயல்பணியில் நியமித்ததில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக கோயில்களுக்கு அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியில் நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''கோயில் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, அறநிலையத் துறை ஆணையருக்கு இதில் அதிகாரமில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை'' என மனுதாரர் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அறங்காவலர் நியமனம் தொடர்பான நடைமுறைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்” என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்கள் நியமிக்காதது துரதிருஷ்டவசமானது. கோயில் நிர்வாகத்தை கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலைய துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால், கோயில் நலனை கருதி அயல்பணியில் அறநிலைய துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று கூறினர்.

அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பதாகவும், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 21 பிப் 2022