மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

விளைநிலத்தில் கச்சா எண்ணெய்: அதிர்ச்சியில் விவசாயிகள்!

விளைநிலத்தில் கச்சா எண்ணெய்: அதிர்ச்சியில் விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே விளைநிலத்தில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் அறிந்த அதிகாரிகள் அங்கு பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். அந்தப் பகுதியில் உள்ள இவருடைய வயலுக்கு அடியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த வயலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகள் நடந்தன.

இந்த நிலையில் நேற்று காலை நடராஜன் தனது வயலுக்குச் சென்று பார்த்தபோது வயலில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன், உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் வருவாய்த்துறை மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் வெள்ளக்குடி ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர் மாரிநாதன் தனது குழுவினருடன் அங்கு நேரில் சென்று கச்சா எண்ணெய் படலம் காணப்பட்ட வயலை ஆய்வு செய்தார். அதேபோல் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி அதிகாரிகள், ‘கச்சா எண்ணெய் குழாய் உடைந்திருந்தால் தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதுபோல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் எண்ணெய் படலம் பரவி உள்ளது. வயலில் கச்சா எண்ணெய் படலம் எதனால் பரவியது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். வயலில் படர்ந்திருந்த எண்ணெய் படலத்தின் மாதிரி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலத்தில் கச்சா எண்ணெய் படலம் பரவியதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுடன், வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளைநிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதாக தகவல் பரவியதால் அந்த பகுதி விவசாயிகளும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

சனி 19 பிப் 2022