கிச்சன் கீர்த்தனா: மலாய் கோஃப்தா இன் கேஷ்யூ கிரேவி!

public

ான், ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுக்கு சைடிஷாகப் பயன்படும் கிரேவியை சாதத்திலும் பிசைந்து சாப்பிட இந்த மலாய் கோஃப்தா இன் கேஷ்யூ கிரேவி துணைபுரியும்.
**என்ன தேவை?**
**கோஃப்தா செய்ய:**
துருவிய பனீர் – 200 கிராம்
மைதா – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
முந்திரி – 5 அல்லது 6 (பொடியாக நறுக்கவும்)
உலர்திராட்சை – 5 அல்லது 6 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
**கிரேவிக்கு:**
முந்திரி – முக்கால் கப் (ஒரு மணி நேரம் ஊறவிடவும்)
பால் – 2 கப்
தண்ணீர் – ஒரு கப்
தர்ப்பூசணி விதைகள் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- ஒன்றரை டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
**அலங்கரிக்க:**
துருவிய பனீர் – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
துருவிய பனீரையும் மசித்த உருளைக்கிழங்கையும் ஒரு பவுலில் சேர்க்கவும். இதனுடன் மைதா, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, எண்ணெய் தடவிய கைகளால் மென்மையான மாவாகப் பிசையவும். முந்திரி, உலர்திராட்சை, தேங்காய்த் துருவலை ஒரு சிறிய பவுலில் சேர்க்கவும். பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஓர் உருண்டையை எடுத்துத் தட்டி நடுவில் அரை டீஸ்பூன் முந்திரி கலவையை வைத்து எல்லா பக்கங்களிலும் மூடி உருண்டையாக்கவும். மற்ற உருண்டைகளையும் இதேபோல் செய்து கொள்ளவும். கோஃப்தா தயார். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கோஃப்தாக்ளைப் போட்டு, லைட் பிரவுன் நிறம் ஆகும் வரை பொரித்தெடுக்கவும்.
தர்ப்பூசணி விதைகளையும் கசகசாவையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். முந்திரியுடன் அரை கப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் அரைத்த பொடி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்து 7- 8 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும், மீதமுள்ள பால், தண்ணீர் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் கிளறவும். உப்பு, சர்க்கரை சேர்த்து, 1 – 2 நிமிடங்கள் கிளறவும். ஏலக்காய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சில விநாடிகள் கிளறி அடுப்பை அணைக்கவும். முந்திரி கிரேவி தயார். கிரேவியில் கோஃப்தாக்களைப் போட்டு, துருவிய பனீர் கொண்டு அலங்கரிக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஆனியன் கேஷ்யூ பீஸ் புலாவ்](https://www.minnambalam.com/public/2022/02/18/1/onion-cashew-pulav) **

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *