மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டிய கனமழையால் வாய்மேடு பகுதியில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்கிறது. அங்கு எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். நெற்கதிர்களைக் கட்டிலில் வைத்து தூக்கி வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 40,000 ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது. இந்தப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக நெற்பயிர்கள் இருந்த நிலையில் கடந்த வாரம் திடீரென கனமழை கொட்டியது. ஆயக்காரன்புலம், வாய்மேடு, பஞ்சநதிக்குளம், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், தலைஞாயிறு, உம்பளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10,000 ஏக்கர் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுக தொடங்கியது.

மழைநீரில் சாய்ந்த நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்து வருவதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்தனர். பெரும்பாலான இடங்களில் உள்ள வயல்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. வயலில் நீர் தேங்கி நிற்பதால், எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சிலர் வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் இன்ஜின் வைத்து வெளியேற்றி வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட வயல்களில் போடப்பட்டிருந்த வைக்கோல் தண்ணீரில் மூழ்கி அழுகி வீணாகிவிட்டது. இந்த வைக்கோலை கால்நடைகளுக்குக்கூட உணவாக கொடுக்க முடியவில்லை என விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

மேலும், கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்தப் பருவத்தில் சம்பா சாகுபடி இரண்டாவது முறையாக மழை பெய்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்திரம் மூலம் அறுவடை செய்ய வழியில்லாததால், சில விவசாயிகள் ஆட்களை வைத்து அறுவடை செய்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்த நெற்கதிர்களை கரைக்குக்கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் நனையாமல் இருக்க விவசாயிகள் அவற்றை கட்டிலில் வைத்து சுமந்து கரைக்கு கொண்டு வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மழையால் பாதித்த சம்பா வயல்களை ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடும், 100 சதவிகிதப் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 18 பிப் 2022