மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வடகரை பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக கியாஸ் குடோன் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் எந்த கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி பஞ்சாயத்து நிர்வாகம் கட்டடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் சுங்குராம்பட்டி கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்கு இறந்தவர்களைக் கொண்டு செல்லும் வழியில் வெடி போடும்போது குடோன் மீது பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அருகில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பணியை உடனே கைவிட வேண்டும் எனக் கோரி சுங்குராம்பட்டி கிராம மக்கள் விடத்தகுளம் திருமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கியாஸ் குடோன் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 17 பிப் 2022