மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

கரும்பு பயிர்களைத் தாக்கும் படைப்புழு: விஞ்ஞானிகள் ஆய்வு!

கரும்பு பயிர்களைத் தாக்கும் படைப்புழு: விஞ்ஞானிகள் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் பெரும் பங்களிப்பை வழங்கும் அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் உணவு பயிர்களைத் தாக்கி மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கக்கூடிய அமெரிக்கன் படைப்புழுக்கள் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு பயிர்களை முதன்முறையாகத் தாக்கியுள்ளது. வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புழுக்கள் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.

தமிழகத்தில் இதுவரை தானிய வகைகளான சோளம், உளுந்து, பாசிப்பயிறு, அவரை உள்ளிட்ட பயிர்களை மட்டுமே தாக்கிவந்த இந்த வகையிலான அமெரிக்கன் படைப்புழுக்கள் தற்போது தமிழகத்தில் முதன்முறையாக கரும்பு பயிர்களைத் தாக்கியுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம், ஒரத்தூர், காணை, காணைக்குப்பம், பெரும்பாக்கம், ஆயந்தூர், ஆற்காடு, கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியுள்ளது. பயிரிடப்பட்ட 30 முதல் 40 நாட்களிலேயே கரும்பு பயிர்களை தாக்கும் இந்த அமெரிக்கன் படைப்புழுக்கள் கரும்பு சோலையை அரித்து நாசம் செய்து விடுகிறது. ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் தமிழ்நாடு வேளாண் அறிவியல் கழக விஞ்ஞானிகளை கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காணைக்குப்பம் கிராமத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்குள்ளான கரும்பு பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு அமெரிக்கன் படைப்புழுக்களின் வளர்ச்சி மற்றும் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து கரும்பு பயிர்களை தாக்கியுள்ள அமெரிக்கன் படைப்புழுக்களை அழிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் உரிய ஆலோசனைகளை வழங்கினர். இந்த வகையிலான அமெரிக்கன் படைப்புழுக்கள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால் அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்கு ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் மட்டுமே இதனை அழிக்க முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்தின் விலை மிக அதிகம் என்பதால் அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்து குறைந்த விலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 17 பிப் 2022