மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: தாய்லாந்து இறால் ஸ்பிரிங் ரோல்

கிச்சன் கீர்த்தனா: தாய்லாந்து இறால் ஸ்பிரிங் ரோல்

ஆசிய நாடுகளில் சீனாவும் தாய்லாந்தும் இறால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. அசைவ உணவுகளில் அத்தனை வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. நலங்களை அள்ளித்தரும் இறாலைக்கொண்டு பொதுவாக ஃப்ரை, தொக்கு, குழம்பு ஆகியவற்றை மட்டுமே செய்வது வழக்கம். தாய்லாந்தில் மிகவும் பிரபலமான இந்த இறால் ஸ்பிரிங் ரோலை நீங்களும் செய்து அசத்தி இந்த நாளைச் சிறப்பாக்கலாம்.

என்ன தேவை?

ரைஸ் பேப்பர் ஸ்பிரிங் ரோல் ரேப்பர்ஸ் (Rice paper spring roll wrappers) – 10 (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

இறால் - 30 (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)

ஸ்டர் ஃப்ரை சாஸ் (Stir fry sauce) - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

வேக வைத்த பழுப்பு அரிசி சேமியா (Brown rice vermicelli) - 2 கப்

நீளமாக, மெலிதாக துருவிய கேரட் - ஒரு கப்

வெள்ளரிக்காய் - 4-5 (மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கவும்)

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய்விட்டு சுத்தம் செய்த இறாலைச் சேர்க்கவும். இதனுடன் ஸ்டர் ஃப்ரை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். ஆழமான பானில் (pan) வெந்நீர் சேர்க்கவும். ஒரு ரைஸ் பேப்பர் ஸ்பிரிங் ரோல் ஷீட்டை எடுத்து நீரில் 10 நிமிடங்கள் நனைக்கவும். அதிகப்படியான நீரை உதறிவிட்டு ஒரு தட்டின் மேல் வைக்கவும்.

வேகவைத்த சேமியாவை பேப்பரின் கீழ்ப்பக்கம் மூன்றில் ஒரு பகுதியில் வைக்கவும். சேமியாவின் மேல் கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி இலை வைக்கவும். பேப்பரை கவனமாக சிலிண்டர் வடிவில் பாதியளவுக்குச் சுருட்டவும். வேகவிட்ட 3 இறாலை மீதி பாதியில் வைத்து பேப்பரை சுருட்டத் தொடங்கவும். ஸ்ப்ரிங் ரோலுக்கு செய்வதுபோல் பக்கங்களை மூடி, இறுக்கமான சிலிண்டர் வடிவ ரோலாகச் செய்யவும். மற்ற ஷீட்டுகளிலும் இதே போல் செய்யவும். ஸ்வீட் ரெட் சில்லி சாஸுடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: தலசேரி தம் மீன் பிரியாணி

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 17 பிப் 2022