மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

ஜனவரியில் விலைவாசி 6.01% உயர்வு: மேலும் உயர வாய்ப்பு!

ஜனவரியில் விலைவாசி 6.01%  உயர்வு: மேலும் உயர வாய்ப்பு!

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் 5.36% ஆக இருந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம், 2022ஆம் ஆண்டு ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளதால் இந்த விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கிராமப்புறங்களில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.12% ஆகவும், நகர்ப்புறங்களில் 5.91% ஆகவும் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 டிசம்பரில் 4.05% ஆக இருந்த நிலையில், 2022 ஜனவரியில் 5.43% ஆக உயர்ந்துள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் 18.7% அதிகரித்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84% ஆகவும், எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32% ஆகவும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக சில்லறை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

-ராஜ்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 16 பிப் 2022