மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

காபி கொட்டை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

காபி கொட்டை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் காபி கொட்டைகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் தேயிலை, காபி மற்றும் மலைப்பயிர்களும், கூடலூர் பகுதியில் தேயிலைக்கு இணையாக சமவெளியில் விளையக்கூடிய காய்கறிகள், நெல் விளைவிக்கப்படுகிறது. அத்துடன் நீலகிரியில் 15,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி விளைகிறது.

இதில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காபி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. காபி பயிரில் ரொபஸ்டா, அரபிக்கா என இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த நிலையில் காபி விதைகள் அறுவடை சீசன் தொடங்கியதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த காபி விதைகளை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே காபி விதைகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், "பிரேசில் உள்பட வெளிநாடுகளில் காபி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள காபி விதைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு இருப்பதால் கிலோ ரூ.85 வரை உயர்ந்து உள்ளது" என்றனர். கூடலூர் காபி வாரிய அலுவலர்கள், "கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலியில் மட்டும் 3,000 ஏக்கருக்கும் மேல் அரபிக்கா ரக காபி விளைகிறது.

இந்த ரகம் கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கிறது. மிகவும் குளிர்ந்த காலநிலை என்றால் மட்டுமே அரபிக்கா ரகம் விளையும். இப்போது விளைச்சலும் விலையும் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கூறியுள்ளனர்.

-ராஜ்

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 16 பிப் 2022