Vகிச்சன் கீர்த்தனா: அக்கி ரொட்டி

public

வ்வோர் ஊருக்குமே பிரத்யேக உணவு கலாச்சாரம் நிச்சயமாக இருக்கும். அந்த வகையில், கர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு இந்த அக்கி ரொட்டி. இட்லி , வடை மற்றும் மசாலா தோசை போன்ற மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு வகைகளைப் போன்று இந்த அக்கி ரொட்டி கர்நாடகாவில் பிரபலம்.
**என்ன தேவை?**
அரிசி மாவு – ஒரு கப்
துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தில் இலைகள் (சதகுப்பை) – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, சதகுப்பை கீரை, பச்சை மிளகாய், உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை, உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஓர் உருண்டையை வாழையிலை அல்லது பட்டர் பேப்பர் மேல் வைத்து மெல்லிய ரொட்டியாக கையால் தட்டவும். ஒரு தோசைக்கல்லை சூடாக்கி கல்லில் பேப்பருடன் / இலையுடன் ரொட்டியைப் போட்டு, பேப்பர் / இலையைப் பிரித்து எடுக்கவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பிப்போட்டு, சுட்டெடுக்கவும். இதை விருப்பமான சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: டெவில்ட் இறால்](https://www.minnambalam.com/public/2022/02/14/1/devilled-prawn)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *