மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்!

மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்!

மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (பிப்ரவரி 14) முதல் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஓரளவுக்கு முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், அதற்காக கல்லூரிகளில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறது.

அதில்... தேசிய மருத்துவ கமிஷன் வழிகாட்டுதல்படி, 2021-22ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 14ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.

அதன்படி, கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடத்தைகள் பின்பற்ற வேண்டும். உணவு கூடங்களில் 50 சதவிகிதம் மட்டுமே எந்த நேரத்திலும் மாணவர்கள் இருக்க வேண்டும்.

அதேபோல் நூலகத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் அனுமதியின்றி விழாக்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தக் கூடாது.

வகுப்பறைகளில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்ற மாணவர்களிடம், கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், உணவு உட்பட விடுதிக் கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணம், காப்பீடு உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.

கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இந்த ஆண்டும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மாணவர்களுக்குப் பின்பற்ற வேண்டும். மேலும், 7.5 சதவிகிதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அரசாங்கம் அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்துவதால், எந்தவிதமான கல்வி உதவித்தொகைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

திங்கள் 14 பிப் 2022