மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

வினாத்தாள் லீக்: முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்படாது!

வினாத்தாள் லீக்: முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்படாது!

அடுத்தடுத்து பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில், நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. பொதுத் தேர்வு எப்படி நடத்தப்படுமோ, அதே கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 9ஆம் தேதியிலிருந்து பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பபட்ட நிலையில், இன்று நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ஆம் வகுப்பு கணித திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நேற்றே திருவண்ணாமலையில் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார் எழுந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றைய தினம் நடைபெறும் திருப்புதல் தேர்வுக்குரிய வினாத்தாள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வினாத்தாள் மாற்றப்படாமல் அதே வினாத்தாளைக் கொண்டே இன்று இரண்டு தேர்வுகளும் நடைபெற்றன. அதற்குள்ளாக, இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. பிற்பகலில் நடக்க வேண்டிய தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சென்னையிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு காலையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, வினாத்தாள் வெளியானது குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டது. வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியானதாக தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து அரசுத் தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குநர் பொன்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் விசாரணை மேற்கொண்டார்.

வினாத்தாள் லீக் ஆவதை தடுக்கும் வகையில் தேர்வுக்குழு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என்றும் தேர்வு தொடங்குவதற்கு சற்று முன்னரே வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 14 பிப் 2022