மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்!

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்!

தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் கும்பளப்பாடி அருகே உள்ள கரடிக்கல்குண்டு கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தையொட்டி கல்குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி பூஜை போட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “பாறைகளுக்கு வெடி வைப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மேலும் கல்குவாரி உள்ள இடத்தை ஒட்டி மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்கக் கூடாது” என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து “உரிய அனுமதி பெற்று கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் சமாதானம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 13 பிப் 2022