மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சிங்க் சுத்தம் செய்வது செம ஈஸி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சிங்க் சுத்தம் செய்வது செம ஈஸி!

சமைப்பதைவிட பெரும் பிரச்சினையாக இருப்பது சமையலறையை சுத்தம் செய்வது. அதிலும் முக்கியமாகப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சிங்க்கை சுத்தம் செய்வது என்பது சிரமமாக இருக்கும். ஆனால், சமையலறை சுகாதாரத்துக்கு சிங்க் இன்றியமையாதது என்பதால், அதைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமானது. இதோ, கிச்சன் சிங்க்கை சுத்தம் செய்வதற்கான எளிய வழிகள்...

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்

* சிங்க்கை சுத்தம் செய்யும் முன்பு அதில் உள்ள பாத்திரங்கள் மட்டுமல்லாது அருகில் சிங்க் மேடையில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தவும். சிங்க் துளையில் தேங்கியிருக்கும் உணவு எச்சங்களை நீக்கவும்.

* வெந்நீரில் சோப்பு நீரை கலந்து, அதைக்கொண்டு சிங்க், குழாய் என அனைத்து இடங்களிலும் சுத்தமாகத் துடைத்து எடுக்கவும். இதேபோல் தினமும் செய்து வந்தாலே சிங் சுத்தமாக இருக்கும்.

* நீண்ட நாள்களாக சுத்தம் செய்யப்படாமல், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சிங்க்கை சுத்தம் செய்வதற்கு, முதலில் வெந்நீரை சிங்க் முழுக்க சிறிதளவு ஊற்றவும் அல்லது தெளிக்கவும்.

* பின்னர், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கால் கப் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து, ஏற்கெனவே வெந்நீர் ஊற்றிவைத்த சிங்க் மீது இந்தக் கலவையை ஊற்றி, 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் பல் துலக்கும் பிரஷ் கொண்டு சிங்க் முழுக்க தேய்த்தால், பளிச்சென இருக்கும். இதேபோல் வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

பீங்கான் சிங்க்

* சிங்க்கை சுத்தம் செய்வதற்கு, முதலில் வெந்நீர் ஊற்றியோ, வினிகர் ஊற்றியோ ஊறவைக்கவும்.

* பின் ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடை அதன் மேல் ஸ்பிரே செய்யவும். 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் வெந்நீர் ஊற்றிக் கழுவிவிடவும். கழுவும்போதே கறையும் சேர்ந்து நீங்கிவிடும். ஒருவேளை கறை நீங்கவில்லை என்றால், பிரஷ்ஷால் தேய்த்தால் போய்விடும்.

* ஒருவேளை அப்படியும் நீங்காமல் எங்காவது கறை மிச்சம் இருந்தால், அரை மூடி எலுமிச்சைப் பழத்தில் சிறிது உப்பு சேர்த்து, கறையில் நன்றாகத் தேய்த்தால் பளிச் என்று நீங்கிவிடும்.

* லெமன் எண்ணெயை சுத்தமான துணியில் இரண்டு சொட்டு எடுத்து சிங்க் முழுவதும் துடைத்தால் பாலிஷ் ஆகி பளிச் என்றாகிவிடும்.

* சிங்க்கில் நீர் வெளியேறும் துளை மற்றும் அதற்குக் கீழ் உள்ள இணைப்புக் குழாயில் படிந்திருக்கும் அழுக்கை நீக்க, அந்தத் துளையில் அரை கப் பேக்கிங் சோடாவை போட்டு, அதன் மேல் கால் கப் எலுமிச்சைச் சாறு, அரை கப் வினிகர் ஊற்றி, கூடவே வெந்நீரை ஊற்றவும். இப்படி செய்வதன் மூலம் துளை மற்றும் குழாய்களில் இருக்கும் அழுக்கு நீங்கி சுத்தமாகிவிடும்.

நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி லாலிபாப்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 13 பிப் 2022