dகிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி லாலிபாப்

public

வ்வரிசியை எடுத்தாலே நாம் செய்யக்கூடிய ஒரே உணவு பாயசம்தான். சிலர் அபூர்வமாக ஜவ்வரிசி வடை செய்வதுண்டு. ஜவ்வரிசியில் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் லாலிபாப்பும் செய்து அசத்தலாம். ஒரே வாரத்தில் ஒல்லியாக இருக்கும் தேகம், இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசியே.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – ஒரு கப் (ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும்)
வேகவைத்து, தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
துருவிய கேரட் – அரை கப்
வறுத்துப்பொடித்த வேர்க்கடலை – அரை கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்
மரக்குச்சிகள் – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஊறவைத்து தண்ணீர் வடிக்கப்பட்ட ஜவ்வரிசியை ஒரு பெரிய பவுலில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் துருவிய கேரட்டை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலையையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த கலவையை உருண்டைகளாக்கி அவற்றில் மரக்குச்சிகளைச் செருகி லாலிபாப் வடிவத்தில் செய்து கொள்ளவும் (மரக்குச்சிகளை வைத்து லாலிபாப் செய்வதற்குமுன்பு அவற்றைத் தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும். (இப்படிச் செய்வதால் லாலிபாப்பை எண்ணெயில் போட்டுப் பொரிக்கும்போது மரக்குச்சி கருகிவிடாது). பின்னர் இந்த லாலிபாப்களை கார்ன்ஃப்ளாரில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பச்சை சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி பூசணி கீர்](https://www.minnambalam.com/public/2022/02/11/1/sago-pumkin-geer)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *