மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 பிப் 2022

பூமியைக் கண்காணிக்க விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-52

பூமியைக் கண்காணிக்க விண்ணில் பாயும்  பிஎஸ்எல்வி சி-52

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தப்படி வருகிற 14ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 5:59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈஓஎஸ்-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்படுகிறது. இது பூமியிலிருந்து 529 கிமீ தூரத்தில் சூரிய ஒத்திசைவான துருவச் சுற்றுப்பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் மற்றும் வரைப்படங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஈஓஎஸ்-04 செயற்கைக்கோள் ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளாகும்.

இந்த ராக்கெட்டில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகத்தின் வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து ஒரு மாணவர் செயற்கைக்கோளான ‘இன்ஸ்பைர்சாட்-1’ உள்ளடக்கிய இரண்டு சிறிய செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ராக்கெட்டின் இறுதி கட்டப் பணியான கவுன்ட் டவுன் 25 மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.29 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த ராக்கெட்டை தொடர்ந்து, இந்தியா மற்றும் பூட்டான் இணைந்து புதிய செயற்கைக்கோளான பூட்டான்சாட்டுடன் இணைந்து மற்றொரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஈஓஎஸ்.-06 அல்லது ஓசோன்சாட்-3 சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் பணி தொடரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது . மேலும் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 11 பிப் 2022