மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பேல்

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பேல்

இந்தியாவில் உருவான சுவையான சிற்றுண்டி பேல். அனைவருக்கும் பிடித்த இந்த சாட் உணவு, அவல், காய்கறிகள், புளி சாஸ் (குழம்பு) ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படுகிறது. மொறுமொறுப்பான பெரும்பாலும் தெருவோர சிற்றுண்டியாகச் சுவைக்கப்படும் இந்த பேலில் ஜவ்வரிசி சேர்த்து வித்தியாசமான பேல் செய்தும் அசத்தலாம்.

என்ன தேவை?

ஜவ்வரிசி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - ஒன்று

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய மாங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - பாதியளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஃபராலி நம்கீன் (Farali Namkin) - ஒரு கப் (ஃபராலி நம்கீன் என்பது வட இந்திய மிக்ஸர் வகை. இந்த மிக்ஸர் பாக்கெட்டாக கடைகளில் கிடைக்கும். இது கிடைக்கவில்லையென்றால் நம்முடைய மிக்ஸரையே பயன்படுத்தலாம்.)

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை நன்கு கழுவி, நிறைய தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து 30 நிமிடங்களுக்கு அப்படியே உலரவிடவும். உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும். உருளைக்கிழங்கில் இருக்கும் தண்ணீரை வடிக்கவும். இதனுடன் ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இந்தக் கலவையைப் பிசிறிக் கொள்ளவும். பிறகு இந்தக் கலவையை 8 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுத்து, ஆறவைக்கவும். ஒரு பெரிய பவுலில் வேகவைத்த கலவையை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய மாங்காய், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, கொஞ்சம் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பின்னர் பராலி நம்கீனைச் சேர்க்கவும். பிறகு இன்னும் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, உப்பு ஆகியவற்றைத் தேவைக்கேற்ப சேர்க்கவும். கடைசியாக மாதுளை முத்துகளைச் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி சர்க்கரைவள்ளிக்கிழங்கு பணியாரம்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 9 பிப் 2022